வலைப்பதிவு

Our Everyday Tasks Depend on Core Cognition

நமது அன்றாடப் பணிகள் நம் அறிவாற்றலை சார்ந்தவை

உங்கள் அறிவாற்றல், உங்கள் நினைவாற்றல், கவனம் மற்றும் தினசரி வேலைகள் போன்ற அடிப்படை செயல்பாடுகளை பாதிக்கிறது. உங்கள் அறிவாற்றல் எப்படிச் செயல்படுகிறது என்று உணர்ந்துகொண்டால் அதைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு உங்களுக்கு உதவும்.

ஒரு குழந்தை பேசுவது, ஒலிகளுக்கு பதிலளிப்பது போன்ற திறன்களை கற்றுக்கொள்வதை நீங்கள் எப்போதாவது கவனித்திருந்தால், நீங்கள் அறிவாற்றலின் வளர்ச்சியை கண்டிருக்கிறீர்கள். இது அடிப்படையில் நம்மைச் சுயாதீனமாக செயல்பட உதவும அனைத்து திறன்களின் தொகுப்பாகும். இதில் கவனம், நினைவாற்றல், கற்றல் மற்றும் சுய கட்டுப்பாடு போன்ற மன செயல்பாடுகள் அடங்கும்.

அறிவாற்றல் மனநல மில்லியன் MHQ ஒரு துணைப்பிரிவாக உள்ளது. இந்த திறன்கள் உயர் மட்ட செயல்பாட்டைக் கட்டமைக்கும் தொகுதிகளாகும்.

உங்களுக்கு ஆரோக்கியமான அறிவாற்றல் இருந்தால், உங்களால்:

  • உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களில் சுய கட்டுப்பாடுடன் செயல்பட முடியும்
  • புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு, செயல்பட முடியும்
  • மொழி உருவாக்கி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
  • முக்கியமான தகவலை நினைவில் வைத்துக்கொள்வது
  • அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்தி உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று உணருவது

மாற்றாக, இந்த பகுதியில் உங்களுக்குப் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள்:

  • கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்ற சில நடவடிக்கைகளுடன் போராடலாம்
  • தேவைப்படும் போது கூட ஓய்வெடுக்கவோ, ஒரு இடத்தில் உட்காரவோ முடியாது
  • மற்றவர்கள் அனுபவிக்காத விஷயங்களைக் கேட்பது, காண்பது, உணருவது அல்லது சுவைப்பது (மாயத்தோற்றம்)
  • சில தருணங்களில் குழப்பமோ அல்லது மந்த சிந்தனைகளோ இருப்பதனால் உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று புரியாமல் இருக்கலாம்.

குறைந்த அறிவாற்றல் எதனால் ஏற்படுகிறது?

அறிவாற்றல் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ADHD போன்ற பல நிபந்தனைகள் உள்ளன, அவை கவனம் மற்றும் நோக்கம் போன்ற அறிவாற்றலின் அம்சங்களை பாதிக்கலாம். ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) போன்ற பிற பிரச்சினைகள், அறிவாற்றலின் மற்றோர் அம்சம் – உணர்ச்சி செயலாக்கத்தை பாதிக்கலாம். அறிவாற்றலை பாதிக்கக்க்கூடிய மற்ற விஷயங்கள் – டிமென்ஷியா உங்கள் நினைவாற்றல் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கலாம், மனச்சோர்வு, பிந்தைய மன உளைச்சல் சீர்குலைவு (PTSD) மற்றும் OCD போன்றவை உங்கள் அறிவாற்றலைக் கட்டாயமாக பாதிக்கலாம். உண்மையில், அறிவாற்றலை அதிக அளவில் பாதிக்காத வெகு சில மனநல மற்றும் நரம்பியல் நிலைமைகளே உள்ளன.

சில நேரங்களில் ஒரு மருத்துவப் பிரச்சினையினால் அல்லது மூளையில் ஏற்பட்ட காயத்தினால் உங்கள் அறிவாற்றலில் ஒரு திடீர் மாற்றம் ஏற்படலாம். உங்களுக்கு அதுபோல் திடீர் மாற்றம், எடுத்துகாட்டாக, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், அல்லது என்ன நடக்கின்றது என்ற குழப்பம் போன்றவை இருந்தால், உடனடியாக உங்கள் பகுதியின் அவசரச் சேவைகளை அழைக்கவும். இது இன்னும் தீவிரமான பிரச்சனையின் எச்சரிக்கையாக இருக்கலாம், உடனடியாக உதவி பெறுவதனால் பெரிய வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.

உங்களுக்கு இதுபோல் ஏதும் திடீர் மாற்றம் ஏற்படவில்லை, எனினும், MHQ இல் குறைந்த அறிவாற்றல் மதிப்பெண் (0 அல்லது அதற்குக் கீழே எடுத்திருந்தால், ஒரு மருத்துவரின் ஆலோசனையை உடனடியாகப் பெற வேண்டும். ஒரு நிபுணரால் உங்கள் குறைந்த அறிவாற்றலின் காரணமும், அதற்கான தீர்வும் உடனடியாக நிர்ணயிக்க முடியும்.

என் அறிவாற்றலை நான் மேம்படுத்த முடியுமா?

ஒரு குறிகிய காலத்தில் உங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க முடியுமா, மற்றும் எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது இந்தப் பிரச்சனையின் காரணியை பொறுத்தது. உங்களுக்கு ஏற்கனவே கண்டறியப்பட்ட மனநலம் அல்லது நரம்பியல் பிரச்சனை இருந்து, அது உங்கள் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதித்துக்கொண்டிருந்தால், முதலில் அதை நிவர்த்தி செய்து நிர்வகிக்க வேண்டும். ஒரு நிபுணர் அளிக்கும் மருந்துகள் அல்லது சிகிச்சைகள் உங்கள் அறிகுறிகளை குறைத்து, நீங்கள் வாழ்க்கையில் போராடும் சில விஷயங்களை எளிதாக்கலாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் கவனக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால், மருந்து, வாழ்க்கைமுறை மாற்றம் அல்லது உணவு மாற்றங்களால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். இந்தச் சவால்களை நன்றாக அறிந்த மனநல மருத்துவர்களால் உங்கள் தினசரி வேலைகளை எளிதாக்குவது, புதிய திறன்களை கற்றுக்கொள்ள உதவுவது அல்லது நீங்கள் அதிகம் சிரமப்படும் பல வேலைகளுக்கு உங்களுக்கு உதவி நாடுவது போன்ற சேவைகளை செய்ய முடியும். உங்களுக்கு இந்த சேவைகள் பெறுவதற்கு எங்கே செல்ல வேண்டும் என்று குழப்பமாக இருந்தால், நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனநலச் சேவைகள் நிர்வாகத்தை (SAMHSA) தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் MHQ அறிவாற்றல் மதிப்பெண் நேர்மறையாக இருந்தால், இதை தொடர்ந்து மேம்படுத்திப் பாதுகாப்பதற்குப் பல வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஹார்வர்ட் ஹெல்த் இன் வெளியீட்டின்படி, தாய் சி போன்ற உடல் மற்றும் மனம் இணைந்து செயல்படும் பயிற்சிகள் உங்கள் மூளையின் ஆற்றலை மேம்படுத்தலாம். மேலும், உடல் ஆரோக்கியத்தை உணவு வழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் மேம்படுத்தினாலும் அறிவாற்றல் அதிகரிக்கும் என்று ஹார்வர்ட் ஹெல்த் குறிப்பிடுகிறது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, உங்கள் இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் அறிவாற்றல் மற்றும் உடல்-மனம் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் மூளைக்கு தொடர்ந்து சவால் விடுவதும் ஒரு சிறந்த வழக்கமாகும். குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் கணித விளையாட்டுகள் போன்றவை உங்கள் அறிவாற்றலுக்கு உதவியாக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான மற்றும் சவாலாக இருக்கக்கூடிய மன விளையாட்டுகளைத் தேர்ந்தெடுங்கள்.

அறிவாற்றல் உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பாதிக்கும் மற்றும் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது. உங்கள் அறிவாற்றலின் மதிப்பெண்ணை அறிந்து கொண்டு, தேவைப்பட்டால், உதவி பெறுவது அவசியம்.