வலைப்பதிவு

Complex Cognition and Mental Health

சிக்கலான சூழ்நிலைகளைs சமாளிப்பதற்கான திறனை நமது அறிவாற்றல் பிரதிபலிக்கிறது

அறிவாற்றல் என்பது முடிவெடுக்கும் திறன், திட்டமிடுதல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் பிரதிபலிப்பு. இது உலகத்துடன் இனைந்து சென்று செழிக்கும் நமது திறனைப் பாதிக்கிறது.

ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பெற்றோர் வாரத்திற்கான உணவைத் திட்டமிட்டு, தனது அலுவலக வேலையை முடித்துவிட்டு, தன் குழந்தையின் கணித வீட்டுப்பாடத்துடன் உதவி செய்கிறார். ஒரு கல்லூரி மாணவர் இறுதி தேர்வுக்கு படித்து, அடுத்த செமஸ்டர் எந்த வகுப்பைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிக்கிறார். ஒரு அலுவலக மேலாளர் ஒரு புதிய பணியாளருக்குப் பயிற்சியளித்து, வாடிக்கையாளரின் புகாரைச் சமாளித்து, அவரது துறையின் வரவு-செலவைத் திட்டமிட்டு முடிக்கிறார். இந்த அனைத்து காட்சிகளிலும் அறிவாற்றல் பயன்படுத்தப் படுகிறது.

அறிவாற்றல் என்பது சிக்கலான சூழ்நிலைகளை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதையும், ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கும் நம் திறனையும் பிரதிபலிக்கிறது. இதில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தன்னிலை படுத்திக்கொள்ளும் நம் தன்மை ஆகிவை உள்ளன. இது ‘மன நல மில்லியன்’ MHQ (மனநல ஈவு) இல் அளவிடப்பட்ட துணைபிரிவுகளில் ஒன்றாகும்.

உங்களிடம் ஆரோக்கியமான அறிவாற்றல் இருந்தால் நீங்கள் இவை அனைத்தையும் செய்யலாம்:

  • உங்கள் வழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது அவைகளை ஏற்றுக்கொண்டு சமாளிக்க முடியும்
  • புதிய யோசனைகளை அளித்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்
  • உங்கள் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை முன்னுரிமைப் படுத்தி, திட்டமிட்டு ஒழுங்கமைக்க முடியும்
  • முடிவுகள் எடுக்கும் போது கணக்கிடப்பட்ட அபாயங்களை ஏற்றுக்கொள்ள முடியும்

அறிவாற்றலில் சிரமப்படும் நபர்கள் பின்வரும் சூழ்நிலைகளைச் சந்திக்கலாம்:

  • உலக நடப்பைப் புரிந்துகொள்வதில் போராட்டம்
  • அடிப்படை முடிவுகளை எடுப்பதில் கூட சிரமப்படுவது
  • தேவையில்லாத அபாயங்களை ஏற்றுக்கொள்வது

குறைந்த அறிவாற்றலிற்கான காரணங்கள்

குறைந்த அறிவாற்றல் ஏற்படப் பல காரணங்கள் இருக்கலாம். அடிப்படையில் மனநல பிரச்சனைகள் இருந்தால் சில நபர்கள் சுயமாகச் சிந்திப்பதற்குச் சிரமப்படுவர்கள். மாற்றாக, மூளையில் காயம் ஏற்பட்டதாலோ அல்லது மருந்துகளின் பக்கவிளைவுகளாலோ இது ஏற்படலாம். சில மரபணு காரணங்கள் கூட அறிவாற்றலை பாதிக்கலாம். வயதான பெரியவர்களுக்கு, அறிவாற்றல் காலப்போக்கில் குறையலாம்.

உங்கள் MHQ வில் நீங்கள் அறிவாற்றலில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால், ஒரு ஆலோசகரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளவும். நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள சேவைகளைக் கண்டறிய , நீங்கள் அமெரிக்காவிலிருந்தால், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனநல சேவைகள் நிர்வாகத்தை (SAMHSA) தொடர்பு கொள்ளலாம்.

என் அறிவாற்றலை நான் அதிகரிக்க முடியுமா?

உங்கள் அறிவாற்றலை அதிகரிக்க சில வழிகள் உள்ளன. ஏதாவது அடிப்படை காரணத்தினால் உங்கள் அறிவாற்றல் குறைவாக இருந்தால், அதை சரிசெய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். எடுத்துக்காட்டாக, சிலருக்கு உணர்ச்சி ரீதியான பிரச்சனைகள் (மனச்சோர்வு போன்றவை) இருக்கலாம், அல்லது அதிக மன அழுத்தத்தினால் முடிவெடுப்பது அல்லது திட்டமிடுதலில் சிரமங்கள் இருக்கலாம். சைக்கோஸிச் அல்லது பித்த வெறியினால் ஏற்படும் அத்தியாயங்கள் உங்கள் சிந்திக்கும் திறனைப் பாதிக்கலாம். உங்கள் உணர்ச்சிகளின் ஆரோக்கியத்தைக் கவனிப்பதனால் உங்கள் அறிவாற்றலை அதிகரிக்கலாம்.

சில சமயம், உடல் நோய்களைச் சரி செய்வதே மிகவும் அவசியம். எடுத்துக்காட்டாக, அல்சைமர் நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்கக்கூடிய மற்றும் உங்கள் அறிவாற்றலை பாதுகாக்க சில மருந்துகள் உள்ளன. இதைப் போல் மூளையில் காயம் ஏற்பட்டு தவிக்கும் நபர்கள் தனது நினைவாற்றலையோ சிக்கல்களை தீர்க்கும் திறனையோ காலப் போக்கில் மீண்டும் வளர்த்துக்கொள்ள முடியும்.

இருப்பினும், இந்த மருந்துகள் மூளைக்கு உதவக்கூடும் என்றாலும், அவைகளின் பக்க விளைவுகளால் உங்கள் அறிவாற்றல் பாதிக்கப் படலாம். எனவே உங்கள் மருத்துவரிடம் உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையை எடுத்துக்காட்டி அதற்கேற்ற உதவியைப் பெறுவதே இதில் சிறந்த வழி.

உங்கள் MHQ மதிப்பெண் நேர்மறையாக இருந்தால், பல விதங்களில் உங்கள் மூளைக்குச் சவாலாக இருக்கும் வேலைகளைச் செய்து காலப் போக்கில் உங்கள் அறிவாற்றலை பாதுகாக்கலாம். முதியவர்களுக்கான தேசிய நிறுவனம் (NIA) உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், புதிய திறன்களை கற்றுக்கொண்டு அறிவைக் கூர்மையாக வைத்திருக்கவும், சமூக ரீதியாக இணைந்திருக்கவும் பரிந்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக, தன்னார்வ வேலைகளில் ஈடுபடுவது, ஏதாவது பொழுதுபோக்கு வேலையை எடுத்துக்கொள்வது அல்லது உங்கள் திறன்களை வளர்ப்பதற்கு பயிற்சியில் சேருவது போன்றவை NIA யைப் பொருத்தவரை உங்கள் “அறிவாற்றல் சேமிப்பை” அதிகரிக்கக்கூடும். இவை முதுமையின் விளைவுகளைச் சரிசெய்ய மூளைக்கு உதவும். வயதான நோயாளிகளுக்கு அறிவாற்றல் திறன்களை கற்பிக்க முடியும் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.

நினைவாற்றல் மற்றும் தியானம் போன்ற செயல்கள் மன அழுத்தத்தைக் குறைத்து அறிவாற்றலை மேம்படுத்த உதவும். யோகா அல்லது தாய் சி போன்ற நினைவாற்றல் மற்றும் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் செயல்கள் காலப்போக்கில் மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவும். ஹார்வர்ட் ஹெல்த் சில நோயாளிகளுக்கு தாய் சி டிமென்ஷியாவை குறைக்கும் என்பதையும் முந்தைய பிரச்சனைகள் இல்லாத நபர்களுக்கு மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் என்பதையும் குறிப்பிடுகிறது. தாய் சி மற்றும் அறிவாற்றலை பற்றிய 20 ஆய்வுகளில் தாய் சி நிர்வாக செயல்பாட்டை மேம்படுத்துவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன – குறிப்பாகப் பல வேலைகளை ஒருங்கிணைத்து செய்வது, நேரத்தை நிர்வகிப்பது மற்றும் முடிவுகள் எடுக்கும் திறன் – இது அறிவாற்றலில் ஏதும் சரிவு இல்லாத நபர்களுக்கும் பொருந்தும்.

அறிவாற்றல் நம் வாழ்வில் பல அம்சங்களைப் பாதிக்கின்றது. எனவே, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அறிவாற்றலை எப்படிப் பாதுகாப்பது என்று அறிந்து, தேவைப்பட்டால் உதவி பெற வேண்டும்.