வலைப்பதிவு

Drive and Motivation

நம் கனவுகளும் குறிக்கோள்களும் நிறைவேற வேண்டுமானால் நமக்குத் தேவை ஊக்கம் மற்றும் உந்துதல்

நமது ஊக்கமும் உந்துதலும் தான் நம் இலக்குகளை நாம் அடைவதற்கான திறனைத் தீர்மானிக்கின்றன. மறைந்திருக்கும் பிரச்சனைகளைச் சமாளித்து நமது ஆர்வங்களைத் தூண்டுவது போன்ற செயல்கள் நமக்கு உதவும்.

நீங்கள் இதுவரை சாதித்த மிக பெரிய சாதனை என்ன? சிலரிடம் இந்த கேள்விக்கு உடனடி பதில் கிடைக்கும். அவர்கள் ஒரு கல்லூரி பட்டப்படிப்பை முடித்ததாகவோ, ஒரு குழந்தையை வளர்த்ததாகவோ, அல்லது வீடு வாங்கியுள்ளதாகவோ பதிலளிக்கலாம். மற்ற பதில்கள் இவ்வளவு வெளிப்படையாக இல்லாமல், ஒரு மராத்தனை முடித்தது, ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொண்டது அல்லது ஏதாவது நோய் அல்லது காயம் போன்ற வாழ்க்கை சவாலைச் சமாளித்ததைப் பற்றிக் கூறலாம்.

இவற்றில் எந்த வேலையும் எளிதல்ல. அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து என்ன நடக்கின்றதோ நடக்கட்டும் என்று சொல்லி யாரும் இந்த இலக்குகளை அடைவதில்லை. ஒரு குறிக்கோளை அடைய வேண்டுமானால் அதற்கு ஆர்வம், தேவை, விடாமுயற்சி, ஆற்றல் மற்றும் உந்துதல் போன்றவை தேவைப்படுகின்றன. இந்த குறிக்கோள்களை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நாம் காட்டும் ஆர்வமும் நமது திறனும் நம் ஊக்கத்தையும் உந்துதலையும் உருவாக்குகின்றன.

ஊக்கம் மற்றும் உந்துதல் மன நல மில்லியனின் MHQ (மன நல ஈவு) ஒரு துணை பிரிவு ஆகும். ஆரோக்கியமான ஊக்கமும் உந்துதலும் இருந்தால், உங்களால்:

  • கடினமான பணிகள் மற்றும் செயல்பாடுகளை ஆரம்பித்து, அவைகளை இறுதிவரை விடாமுயற்சியுடன் செய்து முடிக்க முடியும்.
  • உங்களை சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்க முடியும்
  • உங்கள் இலக்குகளை அடையும் பாதையில் இருக்கும் சவால்கள் மற்றும் கவனச்சிதறல்கலை சமாளிக்க முடியும்.

நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக முடிக்காத பணிகளைக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் எந்த ஒரு குறிக்கோளையும் அடையாமல் இருக்கும் அளவிற்கு உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால், உங்கள் ஊக்கம் மற்றும் உந்துதல் குறைவாக இருந்து அதனால் நீங்கள் சிரமப்படலாம். இந்த பிரச்சனைகளால் உங்கள் ஊக்கம் மற்றும் உந்துதல் பாதிக்கப்படலாம்:

  • தனிப்பட்ட சூழ்நிலைகள் (வீட்டில் பிரச்சனைகள் அல்லது நீங்கள் வசிக்கும் இடத்தில் பொது பிரச்சனைகள் போன்றவை)
  • சமீபத்திய அல்லது கடந்தகால அதிர்ச்சிகளால் ஏற்படும் மன உளைச்சல்
  • உடல் நல பிரச்சனைகளால் ஏற்படும் கவனச்சிதறல் அல்லது ஊக்கமின்மை
  • போதைப் பொருட்கள், வீடியோ கேம்ஸ் அல்லது சூதாட்டத்தினால் ஏற்படும் அடிமைத்தனம்

சிரமங்களைத் தீர்ப்பதற்கான வழிகள்

உங்களுக்கு ஊக்கம் மற்றும் உந்துதலின் குறைபாடு இருந்தால், என்ன நடக்கிறது என்பதையும், நீங்கள் உதவி மற்றும் ஆதரவைப் பெறுவதற்கு என்ன வழிகள் உள்ளன என்பதையும்தீர்மானிப்பது உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, மனச்சோர்வு உள்ளவர்களுக்குக் குறைந்த ஊக்கம் இருக்கலாம். சிகிச்சையாளர்கள் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால், நீங்கள் மிகவும் விரும்பிய விஷயங்களில் உங்களுக்கு ஊக்கம் குறைந்திருக்கிறதா என்பது தான். ஒரு மருத்துவரிடமோ ஆலோசகரிடமோ இந்த உணர்வுகளைப் பற்றிப் பேசுவதன் மூலம் என்ன நடக்கின்றது என்று தெரிந்துகொள்ளலாம். பின்னர் நீங்கள் அந்த சிக்கலை தீர்க்கத் தொடங்கலாம்.

உங்கள் நல்வாழ்வின் பிற சவால்களை நிர்வகிப்பதன் மூலமும் உங்கள் ஊக்கத்தை மேம்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, மன நிலை மற்றும் மனோபாவம், மற்றும் மனம்-உடல் இணைப்பு போன்றவை உங்கள் ஊக்கத்தையும் உந்துதலையும் பாதிக்கலாம்.

ஊக்கம் மற்றும் உந்துதல் என்ற பிரிவில் உங்களுக்கு எதிர்மறையான MHQ மதிப்பெண் இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரையோ, தகுதி வாய்ந்த ஆலோசகரையோ தொடர்பு கொள்ள வேண்டும். அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள சேவைகளைக் கண்டறிய, நீங்கள் அமெரிக்காவிலிருந்தால், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனநல சேவைகள் நிர்வாகத்தை (SAMHSA) தொடர்பு கொள்ளலாம். உங்களிடம் வன்முறை அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், உங்கள் பகுதியிலுள்ள அவசர சேவைகளை அணுகி ஒரு மருத்துவரின் உதவியை உடனடியாக பெறவும். மேலும் தற்கொலை தடுப்பு லைஃப்லைனைப் பார்வையிட்டு ஆதரவு பெறலாம்.

இதற்குத் தொடர்பாக: MHQ மதிப்பெண் எதிர்மறையாக இருப்பது உதவி நாடுவதற்கான ஒரு அறிகுறி என்ற இடுகையைப் பார்க்கவும்.

ஊக்கம் மற்றும் உந்துதல் அதிகரிப்பது எப்படி

உங்களுக்கு ஊக்கம் மற்றும் உந்துதலை பொதுவாக மேம்படுத்த வேண்டுமென்றால் ஆலோசனை வழங்குவதற்குப் பல இடங்கள் உள்ளன. இதற்காகவே பல சுய உதவி மற்றும் ஊக்கம் ஆலோசகர்கள் வேலை செய்கிறார்கள்.

பல ஆராய்ச்சிகள் நமது உள் மற்றும் வெளிப்புற உந்துதலை மையமாக வைத்திருக்கின்றன. ஸ்டெபனோ டி டொமினிக்கோ மற்றும் ரிச்சார்ட் ரியான் என்ற இரண்டு நேர்மறை உளவியல் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி, உள் உந்துதல் இருக்கும் நபர்கள் ஒரு வேலையில் ஈடுபடுவதற்கான காரணம் அந்த வேலையின் மேல் அவர்களுக்கு இருக்கும் சுவாரஸ்யம் மற்றும் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் திருப்தி.. வெளி ஊக்கத்தினால் தூண்டப் படுபவர்கள் ஒரு வேலையைச் செய்வதற்குக் காரணம் அதனால் கிடைக்கும் வெகுமதியினாலோ, அல்லது செய்யாததால் அனுபவிக்கும் தண்டனையினாலோ, அல்லது ஏதாவது எதிர்பார்ப்பினாலோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, ஸாண்ட்ரா ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அவளுக்குள் ஊக்கம் இருப்பதற்குக் காரணம் அவளுக்கு மொழியியல் மீது இருக்கும் பற்று, இருப்பினும், அவள் செலவுகளைச் சமாளிப்பதற்காக அவளுக்குப் பிடிக்காத வேலைக்குச் செல்லுவது அவளுடைய வெளிப்புற ஊக்கத்தினால். பெரும்பாலான நிபுணர்கள் நம் வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கு நமக்கு உள் உந்துதல் மற்றும் வெளிப்புற ஊக்கம் இரண்டுமே தேவை என்று ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், சிலர் உள் ஊக்கம்தான் கடைசி வரை நீடிக்கும் என்று நம்புகின்றனர்.

உங்களுக்குச் சலிப்பூட்டும் வேலைகளை செய்வதற்குத் தேவையான உள் ஊக்கத்தை நீங்கள் மேம்படுத்த வேண்டுமானால், நீங்கள் அதிகம் விரும்பாத குறுகிய கால வேலைகளை உங்கள் நீண்ட கால இலக்குகளுடன் சேர்த்து வைத்து பாருங்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் விரும்பாத ஒரு வேலைக்குத் தினமும் செல்லுவதன் மூலம், வேறு ஒரு சிறந்த வேலைக்குச் சிபாரிசுப் பெறுவதற்கு உங்களுக்கு உதவலாம். வேலையில் சலிப்பு ஏற்படும் நேரங்களில் இதை நினைவில் வைத்துக்கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கலாம். இதேபோல், சம்பந்தமே இல்லாததைப் போல் தோன்றும் கணிதம் போன்ற பொது படிப்பில் தேர்ச்சி பெறுவதன் மூலம் நீங்கள் விரும்பும் வரலாறு பட்டப்படிப்பை நீங்கள் முடிக்க உதவும்.

நாம் அனைவரும் ஊக்கம் மற்றும் உந்துதலுடன் அவ்வப்போது போராடுகிறோம். எப்போதாவது கவனச்சிதறல் ஏற்படுவது சாதாரணமானது. ஆனால், இதுவே அடிக்கடி நடப்பதைப் போல் உங்களுக்குத் தோன்றினால், மற்றும் உங்கள் MHQ மதிப்பெண்ணை நீங்கள் மேம்படுத்த நினைத்தால், மறைந்திருக்கும் நல்வாழ்வு சிக்கல்களை சமாளித்து உங்கள் உள்ளார்ந்த ஊக்கத்தை அடையாளம் காண்பது உங்களுக்கு உதவும்.