வலைப்பதிவு

Understanding Mood and Outlook

மன நிலை மற்றும் மனோபாவம் என்றால் என்ன?

நாம் உணர்வுகள் மற்றும் பின்னடைவுகளை எவ்வாறு சமாளிக்கிறோம் என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தையும் பாதிக்கிறது.

நாம் அனைவரும் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சோர்வடையாத நபர்களைச் சந்தித்திருக்கிறோம். எந்த ஒரு துயரம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கு இவர்கள் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருப்பார்கள். நாம் உணருவதை விட அதிக சிரமப்பட்டாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்து முன்னோக்கி நகர்த்த வைக்கும் இயற்கையான பின்னடைவும் அவர்களுக்கு இருக்கலாம்.

நம் அனைவரின் மன நிலையும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். நேரம், பசி, சோர்வு, அல்லது ஒரு நண்பருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஆகியவை நம் மன நிலையைப் பாதிக்கலாம். நம் ஒட்டுமொத்த மன நிலை, நாம் இது போன்ற சிறிய மற்றும் பெரிய வாழ்க்கை நிகழ்வுகளை எப்படி நிர்வகிக்கிறோம், மற்றும் அவற்றுடன் வரும் உணர்வுகளை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும். வாழ்க்கையை பற்றிய நமது கண்ணோட்டம் நமது உணர்ச்சிகளோடு இணைக்கப்பட்டுள்ளது, நாம் எதிர்காலத்தை எவ்வாறு காண்கிறோம் மற்றும் உலகத்தையே எப்படி உணர்கிறோம் என்பதை எல்லாம் இந்த கண்ணோட்டம் பாதிக்கிறது.

இவை அனைத்தும் மன நிலை மில்லியன் (MHQ) இன் மன நிலை மற்றும் மனோபாவம் என்ற துணைப்பிரிவைச் சார்ந்தவை. உணர்ச்சிகிகள் இருப்பது இயல்பான மற்றும் ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், சிலருக்கு அவர்களுடைய உணர்ச்சிகளையும், நடத்தையையும் ஒழுங்குபடுத்துவது மற்றவர்களுடன் ஒப்பிடும்போது எளிதாக இருக்கலாம். ஒரு நல்ல மன நிலை மற்றும் மனோபாவம் MHQ மதிப்பெண் பெற்ற நபரால் பின்வருவனவற்றைச் செய்ய முடியும்:

  • உணர்ச்சிகள் வலுவாக இருந்தாலும், கடினமான சூழ்நிலையிலிருந்தாலும் தனது நடத்தையையும், பதிலளிக்கும் விதத்தையும் அமைதியாக வைத்திருப்பது
  • நம்பிக்கையுடன் இருப்பது, ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளினால் மனம் தளராமல் நேர்மறையாக எடுத்துக்கொள்வது
  • பின்னடைவுகளுக்குப் பிறகு மீண்டும் எழுவது

குறைந்த மன நிலை மற்றும் மனோபாவம் உள்ளவர்கள்:

  • ஆடிக்கடி அச்சம், கவலை, பதட்டம் அல்லது பீதி அனுபவிக்கலாம்
  • தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்குச் சிரமப் படலாம், உணர்ச்சிவசப் படலாம்
  • அடிக்கடி வயிற்று வலி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளை அனுபவிக்கலாம் அல்லது வெளிப்படையான காரணங்கள் எதுவும் இல்லாமல் அடிக்கடி நோய்களினால் அவதிப் படலாம்
  • தங்களுடைய தவறு அல்லாத விஷயங்களுக்கும் தன்னை தானே குற்றம் சாட்டிக்கொள்ளலாம்

மன நிலை மற்றும் மனோபாவத்தைப் பாதிக்கும் விஷயங்கள்

நம் மன நிலை மற்றும் மனோபாவத்தைப் பாதிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. உயிரியல் மற்றும் மரபணு காரணங்கள், நம்முடைய ஆளுமைகள், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இருக்கும் பந்தங்கள், நாம் வாழும் சூழல், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் உலக நிகழ்வுகள் அனைத்தும் இதில் அடங்கும்.

நம் உணர்ச்சிகளை நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம் மற்றும் உலகத்தை எவ்வாறு காண்கிறோம் என்ற விஷயங்கள் வாழ்க்கையில் நமது மற்ற செயல்பாடுக்களை பாதிக்கின்றன. நீங்கள் தொடர்ந்து மனச்சோர்வடைந்ததாக உணர்ந்தால், வாழ்க்கை இலக்குகளைத் தொடரவோ, அமைக்கவோ உங்களுக்கு வாய்ப்பு குறைவு. உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் உங்களுக்கு அடிக்கடி சிரமம் இருந்தால், நீங்கள் உறவுகளை சேதப்படுத்தலாம் அல்லது பொறுப்புகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். எந்நேரமும் மனச் சோர்வுடன் இருப்பதனால் உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மாற்றாக, வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளைச் சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பது மன தைரியத்தைப் பிரதிபலிக்கிறது. ஏமாற்றங்கள் இருந்தாலும், மன தைரியம் உள்ளவர்கள் மீண்டும் எழுந்து, முயற்சி செய்து, புதிய இலக்குகளை அமைத்துக் கொள்ளலாம்.

என் மதிப்பெண்ணை நான் மாற்றலாமா?

அதிர்ஷ்டவசமாக, நமது மன நிலை மற்றும் மனோபாவத்தை மாற்றுவது நம் கையில் இருக்கக் கூடிய ஒன்று. உங்களிடம் அதிக மதிப்பெண் இருந்து, அதை அங்கேயே வைத்திருக்க விரும்பினால், தொடர்ந்து சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். உங்கள் சமூக தொடர்புகளைப் பராமரிக்கவும், இடைவெளி விட்டு செய்வதாக இருந்தாலும்; அதே சமயம், உங்கள் ஆரோக்கியத்தின் மற்ற பகுதிகளையும் கவனிக்கவும்.

ஒரு மிதமான மனநிலை மற்றும் மனோபாவ மதிப்பெண் இருந்தால், புதிய பயிற்சிகளை முயற்சிக்கலாம், அல்லது, பழைய ஆர்வங்களை மீண்டும் எடுத்துச் செய்து உங்களுக்கு ஆறுதல் மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் வேலைகளில் ஈடுபடலாம். உங்களால் முடிந்தவரை உங்கள் உடல் அமைப்பை மாற்றவும் (ஒரு நாளைக்கு ஒரு முறை நடைப்பயிற்சி செய்தால் கூட போதும்), மற்றும் நேர்மறையான சிந்தனை மற்றும் மனப்பான்மை கருவிகளைப் பற்றி அறியவும். ஒரு ஆலோசகரின் உதயினால் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உங்களைப் பற்றித் தாழ்வாக நினைப்பது போன்ற பழக்கங்கள் மாறலாம். மேலும் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடல் சுய கவனிப்பை மேம்படுத்தவும் அல்லது பராமரிக்கவும், மற்றும் முடிந்த வரை இயற்கை சூழ்நிலைகளில் இருந்து உங்கள் மன நிலையை மேம்படுத்தலாம். மிக முக்கியமாக, நன்றாகத் தூங்கவும்.

இந்த துணைப்பிரிவில் எதிர்மறையான மதிப்பெண் பெற்றிருந்தால் கடந்த கால அதிர்ச்சி, மன சோர்வு அல்லது அடிப்படை நரம்பியல் பிரச்சனைகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது; இது உங்கள் சமூக தன்னுணர்வையும், ஊக்கத்தையும் பாதிக்கலாம்.

நீங்கள் வன்முறை அல்லது தற்கொலை எண்ணங்கள் அல்லது நடத்தைகளை அனுபவிக்கிறீர்கள் என்றும் இது எடுத்துக்காட்டலாம். உங்களுக்கு தற்கொலை, சுய தீங்கு அல்லது வன்முறை எண்ணங்கள் இருந்தால், உடனடியாக உதவி நாடவும். உங்கள் அருகில் இருக்கும் மருத்துவர், ஆலோசகர் அல்லது சிகிச்சையாளரைத் தொடர்புக்கொள்ளவும், ஆதரவுக்கு தற்கொலை தடுப்பு லைஃப்லைனை பார்வையிடவும்.

மேலும் தெரிந்துகொள்ள இந்த பதிவை படிக்கவும்: MHQ மதிப்பெண் எதிர்மறையாக இருப்பது உதவி நாடுவதற்கான ஒரு அறிகுறி

நம் மன நிலை மற்றும் மனோபாவம் நம் வாழ்க்கையின் தரத்தைப் பாதிக்கும் ஒரு முக்கிய விஷயமாகும்; நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, நமக்கு மகிழ்ச்சி அளித்து, பிரச்சனைகள் ஏற்படும் போது நமக்கு மன தைரியத்தை வழங்கி இவை உதவும். ஒரு நேர்மறையான சுவாரசியமான வாழ்க்கை வாழ்வதற்கு இதற்கு முன்னுரிமைக் கொடுத்துப் பராமரிக்க வேண்டும்.