இங்கே உங்கள் சமூக தன்னுணர்வை காணுங்கள், அதற்கு என்ன அர்த்தம், அதனால் உங்கள் வாழ்க்கையில் என்ன வித்தியாசம் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
ஒரு வழக்கமான நாளைக் காணலாம். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிவிட்டு, சமூக ஊடகங்களில் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு, உங்கள் முதலாளி அல்லது சக ஊழியர்களுடன் சந்தித்துப் பேசி, நீங்கள் விரும்பும் நபருடன் பேசலாம். இந்த அனைத்து தருணங்களும், மற்றும் அவற்றின் போது நம்மைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம் என்பது நமது சமூக தன்னுணர்வாகும்.
சமூக தன்னுணர்வு என்பது மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கும் போது நம்மை நாமே எவ்வாறு உணர்கிறோம் என்பதைக் குறிக்கிறது. உறவுகள் வளர்ப்பது, பச்சாதாபம் கொள்ளுதல் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறை, இவை அனைத்தும் இதில் அடங்கும். உங்கள் சமூக தன்னுணர்வு ஆரோக்கியமானதா அல்லது அவ்வளவு ஆரோக்கியம் இல்லாததா என்ற விஷயம் உங்கள் ஒட்டுமொத்த மன நலனையும் வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கான உங்கள் திறனையும் பாதிக்கலாம். இதற்குக் காரணம், நமது தனிப்பட்ட உலகம் ஒரு சமூகத்தைச் சார்ந்தது; இதில் பிறருடன் தொடர்பு கொள்வது அவசியம்.
சமூக தன்னுணர்வு என்பது மன நல மில்லியன் MHQ இன் ஒரு துணைப்பிரிவு. நேர்மறையான சமூக தன்னுணர்வு உள்ளவர்கள் அனுபவிக்கும் சிலவற்றை இங்கே காணலாம் –
- ஒரு ஆரோக்கியமான சுய மதிப்பு – இதில் உடல் உருவமும் அடங்கும்.
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வலுவான தொடர்புகள் மற்றும் உணர்ச்சி பிணைப்புகள்
- உறவுகளில் உடல் ரீதியான நெருக்கத்துடன் திருப்தி மற்றும் இன்பம்
- மற்றவர்களுடன் பேச்சு மற்றும் செயல்கள் மூலமாகத் தொடர்பு கொள்ளும் திறன்
- மற்றவர்களின் நிலையைப் புரிந்து நடந்துகொள்ளும் திறன்
இந்த திறன்கள் உங்களை வாழ்க்கையின் எந்த பகுதிகளில் உதவும் என்று கவனிக்கவும். உங்கள் தன்னம்பிக்கை நன்றாக இருந்தால், உங்களால் எளிதில் ஒரு உறவைத் தொடங்கவும், ஒரு வேலைக்கான நேர்காணல் எடுத்துக்கொள்ளவோ அல்லது புதிய வாழ்க்கை இலக்கைத் தேர்ந்தெடுக்கவோ முடியும். பந்தங்கள் மற்றும் பாச இணைப்புகளுடன் இருப்பது உங்களுக்கு ஆறுதலாக இருந்தால் உறவுகள் மேம்படுவதோடு மன அழுத்தம் குறைந்து காணப் படுகிறது. இந்த தன்னம்பிக்கையினால் நீங்கள் உங்களுக்குரிய எல்லைகளை அமைத்து, உங்களுக்காக எழுந்து நிற்கவும், உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது உதவி நாடவும் முடியும்.
தொடர்புடைய இடுகையைப் பார்க்கவும்: மன நிலை மற்றும் மனோபாவம் புரிந்துகொள்வது.
என் மதிப்பெண் என்ன சொல்கிறது?
MHQ இல் ஒரு உயர்ந்த சமூக தன்னுணர்வு மதிப்பெண் இருந்தால் நம்முடைய உயர்ந்த மன நிறைவும் இந்த உலகில் செழித்து வாழ்வதற்கான நம் திறனையும் பிரதிபலிக்கிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இதே பாதையில் தொடர்ந்திருக்கலாம், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் கவனித்துக்கொண்டு, சமூக தன்னுணர்வை ஒரு முன்னுரிமையாகத் தொடர்ந்து வைத்து கொள்ளலாம்.
ஒரு மிதமான சமூக தன்னுணர்வு மதிப்பெண்ணைப் பராமரிக்கவோ அதிகரிக்கவோ, தொடர்ந்து ஆரோக்கியமான இணைப்புகளை அமைக்கவும் மற்றும் பிறரை அணுகும் பயிற்சியில் ஈடுபடலாம். சமூக இடைவெளியினால் மற்றவர்களுடன் நேருக்கு நேர் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், ஜூம் போன்ற கருவிகள் மூலம் மற்றவர்களைச் சந்திக்கலாம். மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு மேலும் மேலும் புதிய வழிகள் வருகின்றன. நீங்கள் இணையத்தில் சுய உதவி பொருட்கள், வகுப்புகள் மற்றும் இலவச வளங்களையும் பயன்படுத்தலாம்.
சமூக தன்னுணர்வு துணைப்பிரிவில் மிதமான அல்லது குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மேற்கூறிய இடங்களில் போராடலாம், அவர்களுக்கு வேலை, குடும்பம் மற்றும் உறவுகளில் கூட சிரமங்கள் ஏற்படலாம். ஒரு ஆலோசகரைக் காணுவதன் மூலம் நீங்கள் போராடும் இடங்களை அடையாளம் கண்டு, உங்களைப் பற்றிய ஒரு சிறந்த நுண்ணறிவை பெற்று உங்கள் சமூக தன்னுணர்வை மேம்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, அறிவாற்றல் சிகிச்சையின் மூலம் உங்களை சமூக செயல்பாட்டில் பெரிதும் பாதிக்கும் எண்ணங்களை அடையாளம் கண்டு புதிய சிந்தனைகளையும் உரையாடும் வழிகளையும் தெரிந்துகொள்ளலாம். சிறிய மாற்றங்களால் ஒரு பெரிய வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.
MHQ இன் இந்த துணைப்பிரிவில் எதிர்மறை மதிப்பெண் பெற்றிருந்தால், அச்சுறுத்தல், ஆபத்தான அல்லது வன்முறை நடத்தைகள் அல்லது சுய தீங்கு மற்றும் தற்கொலை எண்ணங்கள் பொன்ற விபரீதமானப் பிரச்சனைகளைக் குறிக்கலாம். அப்படியானால், நீங்கள் உடனடியாக உதவி நாட வேண்டும். உங்கள் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகவும், மற்றும் ஆதரவுக்கு தற்கொலை தடுப்பு லைஃப்லைனைப் பார்வையிடவும்.
தொடர்புடைய இடுகையைப் பார்க்கவும்: MHQ மதிப்பெண் எதிர்மறையாக இருப்பது உதவி நாட வேண்டியதற்கான ஒரு அறிகுறி.
சமூக ஊடகங்கள்: பயனுள்ளவையா அல்லது ஆபத்தானவையா?
சமூக ஊடகங்கள் நம் சுய உணர்தலை பாதிக்கின்றதா என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். தற்போதய சூழ்நிலையில் சமூக ஊடகங்கள் மாற்றீட்டை விட சிறந்ததா – அதாவது, மற்றவர்களுடன் தொடர்புக்கொள்ளாத நிலையில் இருப்பதைவிட ஊடகங்கள் மூலமாக தொடர்பில் இருப்பது. பொதுவாக, சிகிச்சையில் உள்ள வாடிக்கையாளர்கள், அதுவும் இளம் வயதினர், சமூக ஊடகங்களால் ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றி விவாதிக்கின்றனர். இருப்பினும், இந்த சமூக வளைத்தளங்கள் இல்லையென்றால், அவர்கள் நண்பர்களுடன் தொடர்புக்கொள்வதிலுள்ளச் சிரமங்களையும் எடுத்துக்கூறுகிறார்கள்.
தொற்று ஏற்படுவதற்கு முன், இந்த தலைப்பில் எடுக்கப்பட்ட ஆராய்ச்சி அவ்வளவாகப் பயனளிக்கவில்லை மற்றும் விவாதிக்க வேண்டிய ஒன்றாக இருந்தது. நூற்றிற்கும் மேற்பட்ட ஆய்வுகளின் ஒரு பகுப்பாய்வு என்ன கூறுகின்றது என்றால், ஒட்டுமொத்தமாக, சமூக ஊடகங்கள் சுய மரியாதையின்மேல் ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், ஏற்கனவே எதிர்மறையான சுயமரியாதை உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களை ஒரு மாற்றாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். சிலருக்கு நேருக்கு நேர் பேசுவதை விட இணையம் வழியாகப் பேசுவதே எளிதாக உள்ளது. சமூக இடைவெளி நடவடிக்கைகள் காரணமாக சமூக ஊடகங்களின் தாக்கம் எவ்வாறு மாறக்கூடும் என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை.
இதில் நல்ல செய்தி என்னவென்றால் உங்கள் சுய உணர்வு மற்றும் உலகத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் கல்லில் அமைக்கப்படவில்லை. உங்களை நீங்களே புரிந்து கொண்டு, மற்றவர்களையும் புரிந்து, உங்கள் எண்ணங்களையும் நடத்தையையும் கேள்வி கேட்டு, தேவைப்பட்டால், உதவி நாடுவதன்மூலம் உங்கள் சமூக தன்னுணர்வை நீங்கள் பாதுகாக்கலாம், இதனால் இந்த சிக்கலான சமூகத்தில் செழித்து வாழலாம்.