மொழியை மாற்றவும்

மனநல மில்லியன் திட்டம்

நமது வளர்ந்துவரும் மனநலத்தைக் கண்காணித்தல்

Mental Health

இந்த மனநல மில்லியன் திட்டம் MHQ மதிப்பீட்டின் பதில்களைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட பரிந்துரைகளையும் மதிப்பெண்களையும் மின்னஞ்சல் அறிக்கை வழியாக வழங்குகிறது; இந்த மதிப்பீடு இலவசம் மற்றும் அநாமதேயமானது பெயரில்லாதது.

பங்கேற்கவும்

மனநல மில்லியன் திட்டம் இவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது

  • வளர்ச்சிக் கண்டுகொண்டிருக்கும் மனநல துறையின் உலகளாவிய வரைபடத்தை உருவாக்குதல்
  • சமூக மற்றும் சுற்றுச்சூழலை இயக்கும் காரணிகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்குதல்
  • ஆபத்தில் உள்ள புவியியல் மற்றும் மக்கள் தொகை அடையாளம் காணுதல்
  • பயனுள்ள கொள்கை மற்றும் தலையீட்டைச் செயல்படுத்த உதவுதல்

கல்வி ஆராய்ச்சி சமூகத்தால் இந்த தரவை வெளிப்படையாக பயன்படுத்த முடியும். இங்கே அணுகலைக் கோரவும்.
தரவு பற்றி மேலும் படிக்க: உலகளாவிய மக்கள்தொகை மனநலத்தின் இயங்குநிலை தரவு தொகுப்பு

உலகின் மன நிலை அறிக்கை 2020

2020 ஆம் அண்டிற்கான உலகின் மன நிலை அறிக்கையில் பின்வருவனவற்றின் ஒப்பீடுகள் அடங்கும்:

  • 8 ஆங்கிலம் பேசும் நாடுகள்
  • வயது, பாலினம் மற்றும் வாழ்க்கை நடைமுறைப் போக்குகள்
  • கோவிட் காரணமாக மன ஆரோக்கியத்திற்கு ஏற்பட்ட உடல், சமூக மற்றும் நிதி தாக்கங்கள்

இந்த அறிக்கையை இங்கே குறிப்பிடவும்:
நியூசன் ஜேஜே, பாஸ்துக் வி, சுகோய் ஓ, டெய்லர் ஜே மற்றும் தியாகராஜன் டிசி, உலகின் மன நிலை 2020, மென்டல் ஹெல்த் மில்லியன் திட்டம், சேபியன் ஆய்வகங்கள், மார்ச் 2021

எங்கள் குறிக்கோள்களை அடைவதற்கு உங்கள் உதவி தேவை

மனநல மில்லியன் திட்டம் ஒரு இலாப நோக்கமற்ற முயற்சியாகும், இதற்குப் பெரிய அளவில் பார்வையாளர்கள் அடையவும், மேலும் முடிவுகளை பொதுப்பார்வைக்கும், கொள்கை வகுப்பாளர்களின் பார்வைக்கும் கொண்டு செல்ல உங்கள் ஆதரவு எங்களுக்கு அவசியம்.

Take Part

பங்கேற்கவும்

தரவுத்தளத்தில் உங்கள் பெயரில்லாத மனநல விவரத்தைச் சேர்க்க MHQஐ எடுத்துக் கொள்ளுங்கள்.
பங்கேற்கவும்

Partner

கூட்டாளர்

உங்கள் சமூகத்தின் மனநலத்தை அளவிடவும், ஒரு பிரதிநிதியாக இருக்கவும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கூட்டாளர்

Donate

நன்கொடைகள்

எங்கள் தரவு திரட்டும் இலக்குகளை அடையவும், விளைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தரவு காட்சிப்படுத்தல்களை உருவாக்கவும் எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
நன்கொடைகள்

ஆலோசனைக் குழு

மனநல மில்லியன் திட்டம் ஒரு கல்வி ஆலோசனைக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் குழுவால் தனியுரிமையைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகள், தரவு பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றப்படும் கேள்விகள் (எடுத்துக்காட்டாக, கோவிடின் தாக்கத்தைப் பற்றி ஒரு கேள்வியைச் சேர்க்க வேண்டுமா? போன்றவை), மற்றும் புவியியல் மற்றும் மக்கள்தொகைக் கவனத்தைத் தீர்மானிக்க முடியும். இந்தக் குழுவில் தற்போது இடம்பெற்றுள்ளவர்கள்:

டாக்டர் ஜெனிஃபர் நியூசன்

முனன்னி விஞ்ஞானி, அறிவாற்றல் மற்றும் மன நலம், சேபியன் ஆய்வகங்கள் அமெரிக்கா (திட்ட மேலாளர்)

டாக்டர் பிராண்டன் கோஹர்ட்

உளவியல் மற்றும் நடத்தை அறிவியல் இணைப் பேராசிரியர், ஜார்ஜ் வாஷிங்கடன் பல்கலைக்கழகம், அமெரிக்கா

டாக்டர் ஹெலன் கிறிஸ்டென்சன்

இயக்குநர் மற்றும் தலைமை விஞ்ஞானி, பிளாக் டாக் இன்ஸ்டிடியூட், சிட்னி, ஆஸ்திரேலியா

டாக்டர் பிம் குயிஜ்பெர்ஸ்

பேராசிரியர், நடத்தை மற்றும் இயக்கம் அறிவியல், மருத்துவ உளவியல், VU பல்கலைக்கழகம் ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

டாக்டர் ஈகோ ஃபிரட்

உதவி பேராசிரியர், மருத்துவ உளவியல், லெய்டன் பல்கலைக்கழகம், நெதர்லாந்து

டாக்டர் விக்ரம் படேல்

பேராசிரியர், உலகளாவிய சுகாதாரம் மற்றும் மக்கள்தொகைத் துறை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா மற்றும் இணைப் பேராசிரியர் மற்றும் இணை இயக்குநர், நாள்பட்ட பிரச்சினைகள் மற்றும் காயங்கள் மையம், பொது சுகாதார அறக்கட்டளை, இந்தியா

டாக்டர் ஜோஷ் சீட்மேன்

நிர்வாக இயக்குநர், அவலேர ஹெல்த் அமெரிக்கா